வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு கடந்தாண்டு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
சமீபத்தில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாக கூறியது. ஆனால் இதை ஏற்காத விவசாயிகள் இந்த 3 வேளாண் சட்டங்கள் முழுமையாகத் தடைசெய்யப்படும்வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேலும், நாளை நண்பகல் 12 மணிமுதல் மாலை 4 மணிவரை நாடு முழுவதும் ரயில் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.