Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடையில் வேலைக்கு சேர்ந்த மைனர் சிறுமி… ஒரே வாரத்தில் மயக்கி திருமணம் செய்த இளைஞர் – இப்போது சிறையில்!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (10:36 IST)
சென்னை அடுத்த பெருங்களத்தூரில் பர்னிச்சர் கடையில் வேலை பார்த்த இளைஞர் ஒருவர் மைனர் பெண்ணை ஆசை வார்த்தைக் கூறி திருமனம் செய்து கொண்டதை அடுத்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெருங்களத்தூரில் உள்ள பர்னீச்சர் கடையில் ராஜாராமன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார்.  இவருக்கு சொந்த ஊர் சிதம்பரம் ஆகும். இந்நிலையில் தீபாவளி காலத்தில் விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால் அந்த கடை உரிமையாளர் ஒரு பெண்ணை வேலைக்கு சேர்த்துள்ளார். அந்த பெண் இன்னும் 18 வயது நிரம்பாத மைனர் பெண் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ராஜாராமன் அந்த பெண்ணிடம் பழகி ஆசை வார்த்தைகளை கூறி காதலிப்பதாக சொல்லியுள்ளார். மேலும் ஒரு வாரத்துக்குள்ளாகவே அவரை மயக்கி திருமணம் செய்து சொந்த ஊருக்கும் அழைத்துச் சென்றுள்ளார். இதுபற்றி அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து போலிஸார் சிதம்பரம் சென்று ராஜாராமனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் சிறுமியை மீட்டு தாம்பரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments