சென்னையில் நியுஸ் ரீடர் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை நம்பி சென்ற பெண்ணிடம் இருந்து நகைகளை திருடியுள்ளது ஒரு தம்பதி.
சென்னையில் தங்கி வேலை தேடி வந்த மினிமோல் என்ற பெண் செய்தி தாளில் நியுஸ் ரீடராக பணிபுரிய ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து அதில் கொடுக்கப்பட்டு இருந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து அவர்கள் மினிமோலை ஒரு தனியார் ஹோட்டலுக்கு வரவழைத்து மேக்கப் போட வேண்டும் என சொல்லி நகைகளை கழட்டியுள்ளனர். அதையடுத்து மினிமோல் கழிவறைக்கு சென்ற போது கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதன் பின்னர் விடுதி மேலாளர் வந்து அங்கு மாட்டியிருந்த அவரை மீட்டுள்ளார். இதன் பின்னர் அந்த பெண் போலீஸில் புகார் கொடுக்க, போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில் அவர்கள் இருவரும் ராவின் பிஸ்ட்ரோ மற்றும் தீபா என்று கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இதுபற்றி மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.