Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோ கமெண்ட்ஸ்... மதுரையை டீலில் விட்ட சிட்டி அமைச்சர்!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (10:57 IST)
மதுரையை 2வது தலைநகரமாக்க விரும்புவது தென்மாவட்ட அமைச்சர்களின் கோரிக்கை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து. 
 
தமிழகத்திற்கு இரண்டாவது தலைநகர் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தமிழக தலைநகராக சென்னை இருந்து வரும் நிலையில் அனைத்து துறை செயல்பாடுகளும் சென்னையிலேயே நடைபெற்று வருவதாலும், மக்கள் தொகை அதிகரிப்பை கருத்தில் கொண்டும் புதிய தலைநகர் மாற்றுவது குறித்த கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.  
 
இந்நிலையில் மதுரையை மையமாக கொண்டு தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் இரண்டாவது தலைநகரை உருவாக்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அதிமுகவிற்குள்ளே மதுரை 2வது தலைநகராக்கப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 
 
ஆம் இது குறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, மதுரையை 2வது தலைநகரமாக்க விரும்புவது தென்மாவட்ட அமைச்சர்களின் கோரிக்கை. 2வது தலைநகர் கோரிக்கை குறித்து முதல்வர் முடிவெடுக்கும் வரை எங்களுக்கு இதில் எந்த நிலைப்பாடும் கிடையாது என அதிரடியாக பேசியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

10 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் எலும்புக்கூடு.. நோக்கியா போனை வைத்து இறந்தவர் அடையாளம் கண்டுபிடிப்பு..!

டெஸ்லா கார் முதல் ஷோரூம் இன்று இந்தியாவில் திறப்பு: மாடல் Y கார் பற்றிய விவரங்கள்!

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments