Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்வி கட்டணம் செலுத்தாவிட்டால் பெயர் நீக்கம்: அண்ணா பல்கலைகழக அறிவிப்பால் அதிர்ச்சி!

Advertiesment
கல்வி கட்டணம் செலுத்தாவிட்டால் பெயர் நீக்கம்: அண்ணா பல்கலைகழக அறிவிப்பால் அதிர்ச்சி!
, புதன், 19 ஆகஸ்ட் 2020 (09:49 IST)
கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் கல்வி கட்டணம் கட்டவில்லை என்றால் பெயர் நீக்கப்படும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கல்வி கட்டணடத்துடன், ஆய்வகம், நூலகம், கல்லூரி வளர்ச்சி ஆகியவற்றிற்கான கட்டணத்தையும் சேர்த்து இந்த மாத இறுதிக்குள் கட்ட வேண்டும் என்றும், கட்ட தவறினால் அபராதத்துடன் செப்டம்பர் 5ம் தேதிக்குள் கட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 5க்குள் கல்வி கட்டணம் செலுத்தாதவர்கள் படிப்பை தொடர விருப்பமில்லை என்று கருதப்பட்டு பெயர் நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. அப்படி இருந்தும் பயன்படுத்தாத ஆய்வகங்கள் மற்றும் நூலகத்திற்கு பயன்பாட்டு கட்டணம் வசூலிப்பது மாணவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எலி சைசில் ஒரு யானை - 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிப்பு