Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய மதுரை இளைஞர்: புதிய தகவல்

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய மதுரை இளைஞர்: புதிய தகவல்
, செவ்வாய், 3 டிசம்பர் 2019 (09:02 IST)
இஸ்ரோ நிறுவனம் அனுப்பிய சந்திரயான் 2வில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் திடீரென மாயமானது தெரிந்ததே. இந்த விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்க இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் தீவிர முயற்சி செய்து வந்த நிலையில் தற்போது விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று முன்னர் அறிவித்துள்ளது
 
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியம் என்ற இளைஞர் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் இந்த விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதனையடுத்து மதுரையைச் சேர்ந்த சண்முகம் சுப்ரமணியன் என்ற இளைஞருக்கு நாசா பாராட்டி மின்னஞ்சல் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
webdunia
மதுரையைச் சேர்ந்த சண்முகம் சுப்பிரமணியம் சென்னை தரமணியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். தமிழக இளைஞர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நாசா, விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளது தமிழகத்திற்கே பெருமைக்குரிய ஒரு விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபத்தில் இருக்கும் பெண்கள் போலிஸை உடனே அழைப்பது எப்படி – காவலன் SOS செயலி கேள்வி பட்டிருக்கிறீர்களா ?