Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆபத்தில் இருக்கும் பெண்கள் போலிஸை உடனே அழைப்பது எப்படி – காவலன் SOS செயலி கேள்வி பட்டிருக்கிறீர்களா ?

ஆபத்தில் இருக்கும் பெண்கள் போலிஸை உடனே அழைப்பது எப்படி – காவலன் SOS  செயலி  கேள்வி பட்டிருக்கிறீர்களா ?
, செவ்வாய், 3 டிசம்பர் 2019 (08:37 IST)
பெண்கள் தாங்கள் ஆபத்தான நேரத்தில் இருக்கும் போது உறவினர்களுக்கும் போலீஸாருக்கும் தகவல் சொல்லும் காவலன் sos என்ற செயலி தமிழக போலீஸாரால் உருவாக்கப்பட்டுள்ளது.

நாலு பேர் சேர்ந்து கேங் ரேப் பண்ண வந்தா என்ன பண்றது - குரூப்ல ஒருத்தங்க கேட்ட கேள்வி

கற்பா, உயிரா னு பாக்கும் போது உயிர் பெரிசு. விட்ருங்க கற்பு போகட்டும் என்பது போல பல வழிகாட்டல்கள். ஆனா போலீஸ கூப்பிடலாமே னு ஒரு பின்னூட்டம் கூட கண்ணுல படல. போகட்டும் என்ன பண்றது. போலீஸ்னாலே கிளைமாக்ஸ் முடிஞ்சுதான் வருவாங்க அப்டீங்குற எண்ணம் மக்களுக்குள்ள இருந்திட்டே இருக்கு

சரி விஷயத்துக்கு வருவோம்.
இந்த மாதிரி சமயத்துல என்ன பன்றது?

ஒன்னு நீங்க 100 க்கு டயல் பண்ணி எந்த சூழ்நிலையா இருந்தாலும் சொல்லலாம். "100 கால் எங்களுக்கு High priority duty" முதல்ல அத அட்டன் பண்ணீட்டுதான் வேற எந்த டியூட்டியா இருந்தாலும் பாக்கனும். அதிக பட்சம் 10-15 நிமிடங்கள்ள போலீஸ் அங்க இருக்கும்.

சரி, பேச முடியாத சூழல். துறத்துறானுங்க. நீங்க ஓடுறீங்கனே வச்சுக்குவோம். Play store la " Kavalan SOS" னு ஒரு ஆப் இருக்கு கண்டிப்பா எல்லோரோட போன்லயும் இருக்க வேண்டிய ஆப். இதுல உங்க சொந்தக்காரங்க போன் நம்பர் 5 எண்ணம் ஸ்டோர் பண்லாம்.

இந்த ஆப் ஓப்பன் பண்ணுனா ரெட் கலர்ல ரவுண்டா ஒரு வட்ட சிகப்பு நிற பொத்தான் டிஸ்ப்ளேயோட சென்டர்ல தெரியும். அதுல SOS னு பெரிசா எழுதிருக்கும். இத நீங்க ஆபத்து காலங்கள்ல ப்ரஸ் பண்ணும் போது உங்க சொந்த காரங்களுக்கு மட்டுமில்ல சென்னையில இருக்குற கண்ட்ரோல் ரூம், டிஸ்ட்ரிக்ட் கண்ட்ரோல் ரூம், பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேசன், ரோந்துல இருக்குற காவலர்கள், ஹை- வே பேட்ரோல், பைக் - பேட்ரோல் எல்லாருக்கும் நீங்க ஆபத்துல இருக்கீங்க னு 15 செகண்ட்ஸ்க்குள்ள மேசேஜ் போகும். அது மட்டுமில்ல இது GPS based. ஆபத்துல இருக்குறவங்கள எங்களால டிராக் பண்ணி ஸ்பாட்டுக்கு போக முடியும். ரொம்ப சீக்கிரமா உங்களுக்கு உதவி கிடைக்கும். இதெல்லாம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த எவ்வளவோ விளம்பரம் பண்ணியும் பெரிசா விழிப்புணர்வு இல்ல.

களத்துல வேலை பார்க்குற எங்களுக்குதான் இதனால எத்தனை உயிரை பாதுகாத்துருக்கோம் னு தெரியும். So, பெண்கள் கண்டிப்பா இந்த ஆப் அ டவுண்லோட் பண்ணி வச்சுக்கங்க. ஆபத்து காலங்கள்ள உதவும். எப்பனாலும் உதவிக்கு காவல்துறையை கூப்பிடுங்க. யாரு வந்தாலும் வரலைனாலும் போலீஸ் நாங்க வந்து நிற்போம். காவல்துறை எப்பவுமே உங்கள் நண்பன்தான்.

*இந்த பதிவு முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை