பேஸ்புக்கில் உள்ள ஒரு சிறு குறையை சுட்டிக்காட்டிய மதுரையைச் சேர்ந்த இளைஞருக்கு நிர்வாகம் 1000 டாலர் பரிசு அளித்துள்ளது.
இன்றைய காலத்தில் எல்லாமே இணையத்துக்குள் கிடைக்கும் எனும் நிலையில் பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெருமாவாரியான ஆதரவு கிடைத்து வருகிறது. அதிலும் பேஸ்புக்கானது இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.
இந்நிலையில் மதுரை ஜெய்ஹிந்புரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் கிஷோர் பேஸ்புக்கில் இருக்கும் ஒரு குறையை சுட்டுக்காட்டி ஆலோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் பதிவேற்றப்படும் வீடியோக்களின் உரிமையை தவறாகப் பயன்படுத்தும் சில வழிமுறைகள் இருந்தன. அதை சுட்டிக்காட்டிய கிஷோருக்கு பேஸ்புக் நிர்வாகம் பாராட்டு தெரிவித்து 1000 டாலர் பரிசையும் அளித்துள்ளது. இந்த பரிசுத்தொகை இந்திய மதிப்பில் 75,000 ரூபாய்க்கு சமமாகும்.