Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை - சென்னை விமான கட்டணம் ரூ.18,000.. திடீர் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி..!

Siva
செவ்வாய், 3 ஜூன் 2025 (07:37 IST)
சாதாரண நாட்களில் மதுரையிலிருந்து சென்னைக்கு 4000 ரூபாய் விமான கட்டணம் என்ற நிலையில் தற்போது திடீரென 18000 ரூபாய் என உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து வெளியூர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதால் விமான கட்டணம் திடீரென உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
நேற்று காலை முதலே உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும் குறிப்பாக மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை சாதாரண நாட்களை விட அதிகமாக இருந்ததாகவும் இதனால் விமான கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
 
சாதாரண நாட்களில் மதுரை - சென்னை விமான கட்டணம் ரூ.4,542 என்று இருந்த நிலையில் தற்போது அது ரூ.18,127 என உயர்ந்துள்ளது. அதேபோல் துாத்துக்குடி - சென்னை ரூ.17,401 என்றும், திருச்சி - சென்னை ரூ.9,164 என்றும், கோவை - சென்னை - ரூ.6,475 என உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments