மதுரை அருகே 25 வயது வாலிபர் ஒருவர், தான் காதலித்த 20 வயதுப் பெண்ணை தனியாக அழைத்து சென்று பாலியல் உறவு கொண்டதோடு, தனது நண்பர்களுக்கும் அப்பெண்ணை விருந்தாக்கிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியை சேர்ந்த தீபன் ராஜ் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணைக் காதலித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு தனது காதலியை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்த தீபன் ராஜ், அங்கு இருவரும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு கொண்டுள்ளார். அதன் பிறகு, தனது நண்பர்களான திருமாறன் மற்றும் மதன் ஆகியோருக்கு போன் செய்து, தான் ஒரு பெண்ணுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, தீபன் ராஜின் வீட்டுக்கு வந்த திருமாறன் மற்றும் மதன், மூவரும் மாறி மாறி அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, பாதிக்கப்பட்ட அந்த பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய தீபன் ராஜ், திருமாறன், மதன் ஆகிய மூவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மேலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.