Publish Date: Tue, 15 Jun 2021 (15:52 IST)
Updated Date: Tue, 15 Jun 2021 (15:55 IST)
கடந்தாண்டு சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவிய கொரொனா தொற்று படிப்படியாக குறைத நிலையில் இந்த ஆண்டு கொரொனா உருமாறி இரண்டாம் அலையாக பரவியது.
இதனையடுத்து மத்திய அரசின் வழிகாட்டலின் அடிப்படையில் தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.164.87 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
குறிப்பாக சென்னை மண்டலத்தில் ரூ.49.54 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.49.54 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.38.72 கோடிக்கும், என மொத்தம் ரூ.164.87 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது,
இதில் மதுரை மாவட்டத்தில் தான் அதிகளவு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இதுகுறித்த செய்திகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.