Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

HBD எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ..இணையதளத்தில் டிரெண்டிங்

HBD எஸ்.பி.பாலசுப்பிரமணியம்  ..இணையதளத்தில் டிரெண்டிங்
, வியாழன், 3 ஜூன் 2021 (20:40 IST)
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பிறந்த தினம் நாளைக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை தற்போது டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்திய சினிமாவில் முன்னணிப் பாடகராகவும், நடிகராகவும் டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளரும், இசையமைப்பாளரும் கோலோட்சியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சினிமாவில் பின்னணிப் பாடலுக்கு பல்வேறு விருதுகள், பரிசுகள் பெற்று மக்கள் மனங்களில் இருந்து, எம்.எஸ்வி, இளையராஜா, ரஹ்மான் முதற்கொண்டு தற்போதைய அனிருத், ஜிவி.பிரகாஷ் வரை பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து தம் பாடலின் மூலமாக இன்றும் வாழ்ந்துவரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பிறந்தநாள் நாளை( ஜூன் 4 ) கொண்டாடப்படுகிறது. எனவே அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை தற்போது டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

நாமும் அமரரும் பாடகருமான எஸ்.பிபிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யூடியூபில் வெளியாகும் ஓவியாவின் வெப்சீரிஸ்!