தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் சுமக்க கூடாது என்ற தடைக்கு மதுரை ஆதீனம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தருமபுர ஆதீன பட்டின பிரவேச விழாவில் ஆதீனத்தின் பல்லக்கை சுமந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்கு ஆன்மீகவாதிகள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்து பேசியுள்ள மதுரை ஆதீனம் “எனது குருவான தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேசத்தை நடத்தியே தீருவோம். உயிரே போனாலும் பரவாயில்லை, நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன். 500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரியத்திற்கு தடை விதிப்பது வருத்தம் அளிக்கிறது. தருமபுர ஆதீன மடத்திற்கு ஆளுனர் சென்றதே பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிப்பதற்கு காரணம்” என அவர் தெரிவித்துள்ளார்.