Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஓட்டுனர் உரிமை வழங்க டிடிவி வாசன் மனு.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

Mahendran
புதன், 13 ஆகஸ்ட் 2025 (10:03 IST)
சாலை விபத்து வழக்கில் சிக்கிய யூடியூபர் டிடிஎஃப் வாசன், தனது ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த 2023ஆம் ஆண்டு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கார் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது விபத்தில் சிக்கினார் வாசன். இந்த விபத்தில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது.
 
இந்த உத்தரவை எதிர்த்து, தனது உரிமத்தை மீண்டும் வழங்கக் கோரி டிடிஎஃப் வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என். மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த பின்னர், சட்டப்படி புதிதாக உரிமம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என்று வாதிட்டார். ஆனால், ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் உரிமம் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமே அணுகலாம் என்று கூறி, டிடிஎஃப் வாசனின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர தின விழாவிற்கு பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது! - பள்ளிகளுக்கு உத்தரவு!

ட்ரம்ப்பை தொடர்ந்து இருப்பிட சான்றிதழ் கேட்ட Cat குமார்! - பீகாரில் லந்து செய்வது யார்?

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு.. சென்னைக்கு கனமழையா?

மாணவர் சேர்க்கை பூஜ்ஜியம்: தமிழகத்தில் 207 அரசுப் பள்ளிகள் மூடல்

பாம்பன் பாலத்தில் திடீர் பழுது.. ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments