Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செட்டாப் பாக்ஸ்களுக்கான கட்டணம் வசூலித்தல்… அரசு நடவடிக்கை!

செட்டாப் பாக்ஸ்களுக்கான கட்டணம் வசூலித்தல்… அரசு நடவடிக்கை!
, வெள்ளி, 18 ஜூன் 2021 (08:22 IST)
தமிழகத்தில் முறைகேடுகளில் ஈடுபடும் கேபிள் ஆபரேட்டர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கட்டணமின்றி, இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200க்கும் மேற்பட்ட சேனல்களைப் பொதுமக்களுக்கு ரூ.140 + ஜிஎஸ்டி என்ற குறைந்த மாத சந்தா தொகையில் வழங்கி வருகிறது. இது மற்ற நிறுவனங்களைவிட மிகக் குறைந்த கட்டணம் மற்றும் அதிகமான சேனல்களும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையை விரும்பும் பொதுமக்கள் அந்தப் பகுதியில் உள்ள அரசு கேபிள் டிவி சேவையை வழங்கும் ஆபரேட்டரிடம் கேட்டுப் பெறலாம். அவ்வாறு பொதுமக்களுக்கு அரசின் சேவையை கேபிள் ஆபரேட்டர் வழங்கவில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண் 180042 52911 மூலம் பொதுமக்கள் புகார் செய்யலாம். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்கள் பழுது அடைந்தாலோ, மாதாந்திரக் கட்டணம் செலுத்தாமல் துண்டிப்பு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது சந்தாதாரர் குடிபெயர்ந்து வேறு இடத்துக்குச் சென்றாலோ அல்லது தனியார் செட்டாப் பாக்ஸ்களைப் பயன்படுத்தினாலோ, இந்நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ் மற்றும் ரிமோட் அடாப்டர் ஆகியவற்றை அந்தப் பகுதியில் உள்ள அரசு செட்டாப் பாக்ஸை வழங்கிய அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளதால் அதை அவர்கள் அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஒருசில கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவையை வழங்குவதற்காக இந்த நிறுவனத்திடமிருந்து செட்டாப் பாக்ஸ்களைப் பெற்றுக்கொண்டு, அதைப் பொதுமக்களுக்கு வழங்காமல், தங்கள் சுய லாபத்துக்காக, தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களைப் பொதுமக்களுக்கு வழங்கி அரசு நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதலாக வசூல் செய்வதாக, புகார்கள் வருகின்றன.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீதும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை மூன்று மாதங்களுக்கு மேலாகச் செயலாக்கம் செய்யாமலும், அவ்வாறு செயலாக்கம் செய்யாத செட்டாப் பாக்ஸ்களைத் திரும்ப ஒப்படைக்காத கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.’ எனக் கூறப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அசையா சொத்துக்களை ஏலத்தில் விடும் ஏர் இந்தியா!