Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''இன்றைய நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பி அவர்!''-முதல்வர் முக.ஸ்டாலின் டுவீட்

''இன்றைய நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பி அவர்!''-முதல்வர் முக.ஸ்டாலின் டுவீட்
, சனி, 3 ஜூன் 2023 (12:54 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்  பிறந்த நாள்  இன்று ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருணாநிதியின்  100 வது பிறந்த நாள் என்பதால், ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான முக.ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

நேற்று கோரமண்டல் விரைவு ரயில் கோர விபத்து ஏற்பட்டதையொட்டி கருணா நிதி  பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று முதல்வர் முக.ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில்,  ‘’ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகம் சனாதனப் பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து உறுதியாய் எழுந்து நின்றது. இந்த மண்ணுக்கான - மக்களுக்கான திராவிட இயக்கம் தோன்றியது. புத்தர் முதல் வள்ளலார் வரை  இந்த மண்ணில் விதைத்த புரட்சியின் அடித்தளத்தில் திராவிட இயக்கம் வேரூன்றியது.

அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் - பண்டித அயோத்திதாசர் - தாத்தா இரட்டைமலை சீனிவாசன் - பிட்டி தியாகராயர் - நடேசனார் - டி.எம்.நாயர் - ஏ.பி.பாத்ரோ - எம்.சி.இராஜா - பனகல் அரசர் - தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா எனத் தமிழினத்தின் இனமான - பகுத்தறிவு - சுயமரியாதை உணர்வைக் காத்திட உருவான தலைவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து - தலைமை தாங்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்!

எண்ணற்ற சமூகநலத் திட்டங்களால் இன்றைய நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பி அவர்!

தமிழ்நாட்டின் அடையாளமாக விளங்கும் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடங்கும் இந்நாளில், அவரது புகழைப் போற்றி, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து, நம் இயக்க இலக்குகளை அடைய உறுதியோடு அவர் வழி நடப்போம்!’’ என்று தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோரமண்டல் ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துக - அன்புமணி ராமதாஸ்