Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக கட்சிக்கொடிக்கு தோப்பு கர்ணம் போடும் குடி போதை ஆசாமி !

Advertiesment
karur
, செவ்வாய், 13 டிசம்பர் 2022 (22:25 IST)
திமுக கட்சி கொடியிடம் மன்னிப்பு கேட்டு ஆசிர்வாதம் பெறும் குடிமகன் கரூர் வைரல் வீடியோ காட்சிகள் 
 
கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த ஞாயிறு அன்று  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினையொட்டி கரூர் பேருந்து நிலையம் முதல் பைபாஸ் ரவுண்டானா வரை பல்வேறு பகுதிகளில் திமுக கட்சி கொடி கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், குடிமகன் ஒருவர் சுமார் 50 வயதிற்கும் மேற்பட்ட நபர், ஒருவர் மதிய வேலையில், கொளுத்தும் வெயிலில், திமுக கட்சி கொடியினை கும்பிட்டு பின்னர், தரையில் விழுந்து சுவாமியிடம் தரிசனம் செய்யும் காட்சி தற்போது கரூர் மாவட்ட மக்களிடையே மிகுந்த அளவில் வைரலாகி வருகின்றது. இது பாவ மன்னிப்பு கேட்கின்றாரா ? அல்லது கோயில் என்று நினைத்து கும்பிடுகின்றாரா ? என்றும் கேள்விக்குறியான நிலையில், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் மிகுந்த அளவில் வைரலாகி வருகின்றது. இதுமட்டுமில்லாமல் ஒரு வேலை சரக்கு விலை ஏறி போச்சு என்று விழுந்து கும்பிட்டாரா ? என்று பல்வேறு வினாக்கள் எழுகின்றன.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லஞ்சம் வாங்கிய பணத்தை விழுங்கிய காவலர்! பரபரப்பு சம்பவம்