Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடராஜன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

Advertiesment
நடராஜன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்
, செவ்வாய், 20 மார்ச் 2018 (08:20 IST)
சசிகலாவின் கணவரும் பத்திரிகையாளரும், அரசியல் ஆலோசகருமான நடராஜன் இன்று அதிகாலை உடல்நலக்கோளாறால் காலமானார். அவருக்கு வயது 74. நடராஜனின் மறைவுக்கு பிரபல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திருமாவளவன்: நடராஜனின் மறைவு மொழி, இன உரிமை, ஈழ விடுதலை அரசியல் களத்திற்கு பேரிழப்பு

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா: நடராஜனின் மறைவு மொழி, இன உரிமை, ஈழவிடுதலை அரசியல் களத்திற்கு பேரிழப்பு:

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா: புதிய பார்வை பத்திரிகை ஆசிரியரும், சசிகலா அவர்களின் கணவரும், பிரபல அரசியல் தலைவருமான நடராஜன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இதயபூர்வமான இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் : *மொழிப்போர் வீரரான நடராஜனின் மறைவுக்கு, அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்

தினகரன் ஆதரவாளர் புகழேந்தி: சசிகலாவின் கணவர் நடராஜனின் மறைவு பேரிழப்பு

மேலும் நடராஜன் மறைவுக்கு, கி.வீரமணி, சுப.வீரபாண்டியன், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடராஜன் காலமானார்: சசிகலாவுக்கு பரோல் கிடைக்க வாய்ப்பு