தமிழ்நாட்டில் சமீபத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டதாக எழுந்த சந்தேகங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமுதா அவர்கள், “தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தற்போது வரை 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த மழை அளவு இயல்பை விட 58 சதவீதம் அதிகம் ஆகும்” என்று தெரிவித்தார்.
மேகவெடிப்பு என்றால் என்ன என்பதற்கான வரையறையை அவர் விளக்கினார். ஒரே இடத்தில், ஒரு மணி நேரத்திற்குள் 10 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பொழிந்தால், அது மேக வெடிப்பு என்று அழைக்கப்படும். தமிழ்நாட்டில் அத்தகைய நிகழ்வு ஏதும் இதுவரை பதிவாகவில்லை.
மேலும், “மேகவெடிப்பு நிகழ்வை முன்கூட்டியே கணிப்பது இயலாது” என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா கூறினார்.
அரபிக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்துப் பேசிய அவர், அது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.