Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை உணவு கடை.. மத்திய அமைச்சர் திறப்பு..!

Siva
வியாழன், 27 பிப்ரவரி 2025 (18:29 IST)
சென்னை விமான நிலையத்தில் இதுவரை உணவு பொருட்கள் மிக அதிக விலைக்கு விற்பனையாகிய நிலையில், தற்போது மலிவு விலை உணவகத்தை மத்திய அமைச்சர் திறந்து வைத்ததை அடுத்து, விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
சென்னை விமான நிலையத்தில் தண்ணீர் பாட்டில் ₹125, இட்லி ₹250, பிரியாணி ₹450 என விற்பனையாகி வந்ததால், பயணிகள் உணவுப் பொருட்களை வாங்கத் தயங்கிக் கொண்டிருந்தனர்.
 
இந்த நிலையில், பயணிகளின் வசதியை முன்னிட்டு  மலிவுவிலை உணவக திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஏற்கனவே கொல்கத்தா விமான நிலையத்தில் இந்த கஃபே திறக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையிலும் திறக்கப்பட்டுள்ளது.
 
மாற்றுத்திறனாளிகள் நடத்தும் இந்த உணவகத்தில், தண்ணீர் பாட்டில் ₹10, டீ ₹10, காபி ₹20, வடை ₹20 என மலிவு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், பயணிகள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சாப்பிட்டு வருகின்றனர்.
 
இந்தக் கஃபேவை மத்திய அமைச்சர் ராமேஷ் நாயுடு திறந்து வைத்ததுடன், நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும், இந்த திட்டத்தால் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments