உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படவுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்க காலதாமதம் ஆகும் என செய்திகள் வெளிவந்துள்ளது.
முதலில் பதிவான வாக்கு பதிவு பெட்டியில் உள்ள வாக்குச் சீட்டுகள் முழுமையாக கொட்டப்படும். அதில் 4 வண்ணங்களில் உள்ள வாக்குச் சீட்டுகள் தனிதனியாக பிரிக்கப்படும். வண்ணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் ஐம்பது ஐம்பதாக பண்டல் செய்யப்படும்
அதன்பிறகு வாக்காளர் பட்டியல், வாக்கு பதிவு செய்தோர் பட்டியல் சரிபார்க்கப்படும். அதில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால், அதற்கான ஆர்.ஓ கடிதம் அளிப்பார். அதன்பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்கும்
எனவே காலை 8 மணிக்கு முதல் இந்த வாக்கு எண்ணும் நடைமுறைகள் தொடங்கும் என்பதால் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்காது என்றும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வாக்கு எண்ணிக்கை காலதாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் முதல்கட்ட முடிவு காலை 9 மணிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது