இரவு முதல் அதிகாலை வரை மழை.. குளிர்ந்தது சென்னை..!

Siva
வியாழன், 7 நவம்பர் 2024 (07:29 IST)
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மிதமான மழை பெய்து கொண்டிருப்பதை அடுத்து குளிர்ந்த தட்பவெப்ப நிலையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது மற்றும் வங்கக் கடலில் தோன்றிய வளிமண்டல சுழற்சி ஆகியவை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அந்த வகையில், நேற்று இரவு திடீரென சென்னையில் மழை பெய்யத் தொடங்கிய நிலையில் விடிய விடிய மிதமான மழை பெய்ததாகவும், இன்று அதிகாலை முதல் தற்போது வரை லேசான மழை பெய்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை வடபழனி, கோடம்பாக்கம், சேப்பாக்கம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா சாலை, தியாகராய நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் சென்னையின் தட்பவெப்ப நிலை குளிர்ச்சியாக மாறியதை அடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், இந்த மழை இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்று கூறப்படுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments