திருமணம் ஆகாத விரக்தி: கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்..!

Siva
வியாழன், 7 நவம்பர் 2024 (07:23 IST)
திருமணமாகாத விரக்தியில், 28 வயது வாலிபர் தனக்குத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டிவனம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் அருகே, திருமணமாகாத விரக்தியில், பொறியியல் பட்டதாரி 28 வயதான ராஜசேகர் கடந்த சில மாதங்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

பொறியியல் படிப்பில் சிறந்து விளங்கிய இவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை சென்னையில் பணி புரிந்திருந்தார். தனக்கு பார்த்த பெண்ணெல்லாம் கைவிட்டுப் போய்விட்டதாகவும், திருமணம் தொடர்ந்து தள்ளிப் போகிறது என்று மன வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று திடீரென வாழைத்தோப்பில் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய இந்த விபரீத முடிவால், குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பொறியியல் படிப்பை முடித்து நல்ல வேலையில் இருந்த ராஜசேகருக்கு திருமணம் தள்ளிப்போனது மன வருத்தத்தை ஏற்படுத்தியதால், அவர் விபரீத முடிவை எடுத்திருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments