கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலையொட்டி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை தமிழக பாஜக தலைமை நியமித்தது.
இதையடுத்து, பத்திரிக்கையாளர்களுடன் விவாதம், ஆளுங்கட்சியினருக்கு எதிரான ஊழல் குறித்துப் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால், உட்கட்சிக்குள் அவர் சர்வாதிகாரி மாதிரி நடந்துகொள்வதாகக் கூறி நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்துகொண்டனர்.
,கடந்த சில நாட்களுக்கு அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்னால் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாஜகவில் உள்ள தலைவர்களே மறுப்பு தெரிவித்து வந்தனர். பாஜகவை பொருத்தவரை தலைமை தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் என்றும் மாநில தலைவர் இது குறித்து முடிவு எடுக்காது என்றும் கரு நாகராஜன், எச் ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோர் கூறினர்.
இந்த நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை என்றும் தேர்தல் கூட்டணி குறித்து மத்திய தலைமை தான் முடிவு எடுக்கும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
ஆளுங்கட்சியான திமுகவே, பாஜகவை முக்கிய எதிர்க்கட்சியாக பார்த்து வரும் நிலையில், இன்று நெல்லையில், வரும் பாராளுமன்றத் தேர்தலையொட்டி ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், ''எங்கள் நரேந்திரரே தனித்து வா தாமரையை 40 இடங்களிலும் மலரச் செய்வோம்,'' என்ற வாசகங்கள் அந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.
கடந்த தேர்தல்களில் அதிமுகவுடன் இணைந்து பாஜக செயல்பட்ட நிலையில், அடுத்து வரும் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுமா? இல்லை மீண்டும் கூட்டணி அமைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.