உலகின் மிக முக்கிய வெளிநாட்டு அரசியல் கட்சிகளில் ஒன்று பாஜக என அமெரிக்க பத்திரிக்கை கட்டுரை எழுதி உள்ளது. இந்தியாவில் ஆளுங்கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சி உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக உள்ளது என்றும் ஆனால் அக்கட்சி குறைவாகவே மக்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி பொருளாதார சக்தி படைத்த நாடாக இந்தியா உருவாகி வருகிறது என்றும் இந்தோ - பசுபிக் பிராந்திய பகுதிகளில் அமெரிக்காவின் செயல் திட்டத்திற்கு இந்திய அரசு உறுதுணை ஆக பணியாற்றி வருகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்னும் பாஜகவை பலர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் இந்தியர் அல்லாத பலரும் இந்த கட்சியின் வரலாறு குறித்து அறிந்திருக்கவில்லை என்றும் அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளது.
100 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டை வழிபடுத்தி செல்லும் ஆற்றல் கொண்ட கட்சி பாஜக என்றும் பிரதமர் மோடியின் திறமையை இன்னும் ஒரு சில நாடுகள் ஏன் அங்கீகரிக்கவில்லை என்றும் அதில் கேள்வி எழுப்பு உள்ளது.
20 கோடி மக்களை கொண்ட உத்தர பிரதேசத்தில் பாஜக அரசு இஸ்லாமியர்களின் வலிமையான ஆதரவு பெற்று ஆட்சி அமைத்து வருகிறது என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் பங்கு இந்த கட்சியில் முக்கியம் வாய்ந்தது என்றும் அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளது