பிரம்மன் உலகைப் படைத்த நாளாக கூறப்படும் உகாதி திருநாளை தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் வாழ்த்துகள் கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உகாதி திரு நாளில் தங்களது புத்தாண்டு நாளை(22-03-23) கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட உடன்பிறப்புகளுக்கு எனது நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அறுசுவை உணவோடு மகிழ்ச்சி பொங்கல் புத்தாண்டை வரவேற்கும் உள்ளது இல்லத்திலும், வாழ்விலும் அந்த மகிழ்ச்சி என்றேன்றும் நிலைத்திட நெஞ்சார வாழ்த்துகிறேன்.
தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் உணர்வுகளை மதித்து, உகாதி திரு நாளுக்கு அரசு விடுமுறை அளித்தவர் முத்தமிழறிஞர் அவர்கள் என்பதை நினைவுகூர்கிறேன்.
விந்திய மலைக்கு தெற்கே பரந்துவாழும் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த நம்முடைய உறவும் ஒற்றுமையும் வலுப்பட வேண்டும். திராவிட இன மக்களுக்குள்ளான ஒற்றுமை மிளிர்ந்து சகோதரத்துவம் வாழ்ந்திடவும் நமது மொழி பண்பாடு மற்றும் உரிமைகளைக் காத்து உலகளவில் சிறந்து விளங்கடவும் வேண்டும் என உகாதி திரு நாளில் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.