Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2026 சட்டமன்றத் தேர்தலில் வரலாறு படைக்க உறுதியேற்போம்! முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி

Mahendran
சனி, 1 மார்ச் 2025 (09:18 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தனது 72 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய மகனும் துணை முதல் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ’2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு 200க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று வரலாறு படைக்க உறுதி ஏற்போம்’ என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்  அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில்  நாமும் பங்கேற்றோம்.

ஆதிக்க மொழித் திணிப்பை எதிர்த்து, தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளின் உரிமைகளுக்காகவும் - ஒட்டுமொத்த மாநிலங்களின் சுயமரியாதைக்காகவும் தமிழ்நாட்டிலிருந்து குரல் கொடுக்கும் நம் தலைவர் அவர்களின் புகழைப் போற்றிடும் வகையில் நம் தோழமை இயக்கங்களின் தலைவர்கள் உரையாற்றினர்.

தமிழ் மொழி காக்க - தமிழ்நாட்டின் உரிமைகளைப் பேணிட நம் முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

இந்த உணர்வோடு 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வோம். 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று வரலாறு படைக்க உறுதியேற்போம்!

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 5 பேர் பரிதாப பலி.!

அரசுப் பள்ளிகளில் 2025- 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தயாராகும் பெற்றோர்..!

16 மாநிலங்களில் 10 கோடி ஆன்லைன் மோசடி.. டாக்டர் உள்பட 2 பேர் கைது..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments