Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விவசாயிகளை தொடர்ந்து வன ஊழியரையும் தாக்கிய சிறுத்தை! – தீவிர தேடுதல் வேட்டை!

Advertiesment
விவசாயிகளை தொடர்ந்து வன ஊழியரையும் தாக்கிய சிறுத்தை! – தீவிர தேடுதல் வேட்டை!
, செவ்வாய், 25 ஜனவரி 2022 (12:45 IST)
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சோளக்காட்டில் பதுங்கிய சிறுத்தை வன ஊழியரையும் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பாப்பாகுளம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாறன். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விளைவித்திருந்த சோளத்தை அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வயல் பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து மாறனை தாக்கியுள்ளது.

மாறன் அலறியதை கேட்டு உதவிக்கு வந்த மேலும் இரு விவசாயிகளையும் சிறுத்தை மூர்க்கமாக தாக்கி தப்பியுள்ளது. அதை தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டபோது சோள வயலில் பதுங்கியிருந்த சிறுத்தை வன ஊழியர் ஒருவரையும் தாக்கியுள்ளது.

இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் வன ஊழியர்கள், கும்கி யானையை கொண்டு வந்து சிறுத்தையை தேடும் பணியை தீவிரப்படுத்தப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எண்கவுண்ட்டர் ப்ளான்? நீதிமன்றத்தில் ஆஜரான ரவுடி படப்பை குணா!