தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்கள் உருவாக இருப்பதாக சட்டசபைரவையில் அமைச்சர் கே கே ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களை பிரிப்பதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக ஆரணியை தலைமை இடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைச்சர் இந்த பதிலை அளித்துள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள் என்று கூறிய கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன் இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் நிதி நிலைமைக்கு ஏற்ப மாவட்டங்களை பிரிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏற்கனவே 38 மாவட்டங்கள் இருக்கும் நிலையில் மேலும் 8 மாவட்டங்கள் எப்போது உருவாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்