Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மயிலாப்பூர் எம்.எல்.ஏ, மகாராஷ்டிரா எம்பி: குஷ்புவுக்கு பாஜக வைத்த இரண்டு ஆஃபர்கள்!

மயிலாப்பூர் எம்.எல்.ஏ, மகாராஷ்டிரா எம்பி: குஷ்புவுக்கு பாஜக வைத்த இரண்டு ஆஃபர்கள்!
, புதன், 14 அக்டோபர் 2020 (12:46 IST)
காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி பாஜகவில் சேர்ந்த குஷ்புவுக்கு பாஜக தலைமை இரண்டு ஆப்சன்கள் கொத்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒன்று மயிலாப்பூர் தொகுதியில் பாஜகவின் எம்எல்ஏ வேட்பாளர். இரண்டாவதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்படும் ராஜ்யசபா எம்பி வேட்பாளர். இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என்று அவருக்கு ஆப்சன் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
 
வரும் சட்டமன்ற தேர்தலில் குஷ்புவை ஒரு தொகுதியில் அதாவது மயிலாப்பூர் தொகுதியில் நிறுத்தினால் அந்த தொகுதியில் மட்டுமே அவரால் கவனம் செலுத்த முடியும் என்றும் அதனால் அவர் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்துக்கு செல்ல முடியாது என்றும் குஷ்பு போன்ற ஒரு பிரபலம் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தால் பாஜகவுக்கு கூடுதல் பலம் இருக்கும் என்றும் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் கருதுகிறார்.
 
எனவே எல் முருகனின் கோரிக்கையின்படி குஷ்பு, மயிலாப்பூர் எம்.எல்.ஏ வேட்பாளர் ஆப்சனை தேர்வு செய்ய மாட்டார் என்றும், மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
 
மேலும் தமிழகம் மற்றும் கேரளாவில் ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இரண்டு மாநிலங்களிலும் குஷ்புவும் சூறாவளி பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
எல் ருகனின் ஆலோசனையை ஏற்று ராஜ்யசபா எம்பி பதவியை குஷ்பு தேர்வு செய்து விட்டதாகவும் விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் பல ஆண்டுகளாக இருந்தும் குஷ்புவுக்கு எம்எல்ஏ மற்றும் எம்பி பதவிகள் கிடைக்கவில்லை. ஆனால் பாஜகவில் சேர்ந்த ஒரு சில நாட்களில் அவருக்கு எம்பி பதவி கிடைக்க உள்ளதால் இதை பார்த்து இன்னும் சில திரையுலக பிரபலங்களும் பாஜக பக்கம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து வன்கொடுமை! கர்ப்பமாக்கிய மந்திரவாதி தர்ம அடி!