Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைரமுத்து மிகவும் கண்ணியமானவர் - குஷ்பு ஆதரவு

Advertiesment
வைரமுத்து மிகவும் கண்ணியமானவர் - குஷ்பு ஆதரவு
, சனி, 20 அக்டோபர் 2018 (17:20 IST)
கவிஞர் வைரமுத்து பெண்களிடம் கண்ணியமாக நடப்பவர் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

 
இதுவரை எந்த புகாரில் சிக்காத கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரைத் தொடர்ந்து வேறு சில பெண்களும் வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என தொடர்ந்து புகார் கூறியது மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. என்  மீது தவறிருந்தால் வழக்கு தொடுக்கலாம். காத்திருக்கிறேன் என வைரமுத்து கூறிவிட்டார்.
 
ஆனாலும், அவர் மீது தொடர் புகார்கள் குவிந்து வருகிறது. பாடகர் மலேசியா வாசுதேவன் மருமகளான ஹேமாமாலினியும் வைரமுத்துக்கு எதிராக டிவிட் போட இந்த விவகாரம் டிவிட்டரில் பற்றி எரிகிறது.
 
இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த குஷ்பு, தான் பார்த்ததிலேயே பெண்களிடம் மிகவும் கண்ணியமாக நடப்பவர் வைரமுத்து என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபரிமலை குறித்து கருத்து கூற விரும்பவில்லை: ஜகா வாங்கிய முதல்வர்