Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒன்றிய அரசு அல்ல, பாரத பேரரசு: குஷ்பு

Advertiesment
ஒன்றிய அரசு அல்ல, பாரத பேரரசு: குஷ்பு
, வெள்ளி, 11 ஜூன் 2021 (21:36 IST)
திமுக உள்ளிட்ட ஒரு சில கட்சிகளின் தலைவர்கள் கடந்த சில நாட்களாக மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வருகின்றனர். திமுக ஆதரவு ஊடகங்களும் ஒன்றிய அரசு என்றே பதிவு செய்து வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து நடிகையும் பாஜக பிரபலமான குஷ்பு தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதில் பெருமை கொள்பவர்கள்தான் முன்பு மத்திய அரசின் அங்கமாகப் பதவி முதல் பணம் வரை அனைத்தையும் அனுபவித்தார்கள். துரதிர்ஷ்டவசமாக மத்தியில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தவர்களும் இப்படிப்பட்டவர்களின் இந்த ஒன்றிய நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்கள்.
 
ஆனால் எதிர்கட்சியாகப் பல ஆண்டுகள் இருந்தாலும் நாங்கள் மத்திய அரசு எனச் சொல்வதில்தான் பெருமை கொள்கிறோம். இதை மறந்து  அழுக்கு அரசியல் செய்யும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இது 'பாரத பேரரசு' என்பதை நினைவூட்டுகிறோம். உங்களுக்கு இது புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார் உதிரி பாக கடைக்காரரை மிரட்டிய யூடியூப் பிரபலம் கைது!