மத்திய அரசு கொரோனா வைரஸ் தடுப்பு ஊசிகளை மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்கி வருகிறது என்பதும் ஒரு சில மாநில அரசுகள் அந்த தடுப்பூசிகளை முழுமையாக பயன்படுத்தி வருகிறது என்பதும் சில மாநில அரசுகள் வீணாக்கி வருகிறது என்பதும் செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசிகளை வீணாக்கிய மற்றும் முழுமையாக பயன்படுத்திய மாநிலங்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கேரளா மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் மத்திய அரசு கொடுத்த தடுப்பூசிகளை முழுமையாக பயன்படுத்தி பாராட்டுதலைப் பெற்று உள்ளது
கேரளாவில் 1.1 லட்சம் வைரஸ் தடுப்பூசிகள் மேற்கு வங்கத்தில் 1.61 லட்சம் குழந்தைகள் தடுப்பூசி மூலம் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் ஜார்கண்ட் மாநிலம் தடுப்பூசிகளை வீணாக்கியதில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் 35 95% தடுப்பூசிகளின் வீணாக்கியதாக தெரிகிறது அதேபோல் சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களும் தடுப்பூசிகளை அதிக அளவில் வீணாக்கிய மாநிலங்களின் பட்டியலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது