Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லட்சத்தீவு விவகாரம் குறித்து பேசிய நடிகை… தேச துரோக வழக்கு!

Advertiesment
லட்சத்தீவு விவகாரம் குறித்து பேசிய நடிகை… தேச துரோக வழக்கு!
, வெள்ளி, 11 ஜூன் 2021 (12:31 IST)
இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளுக்கு சட்டமன்றம் இல்லாததால் ஒன்றிய அரசே நிர்வாகியை நியமித்து வருகிறது.  இந்திய யூனியனின் நிர்வாக அதிகாரியாக இருந்த தினேஷ்வர் வர்மா, கடந்த ஆண்டு இறந்ததை அடுத்து பொறுப்பு அதிகாரியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார். இவர் அங்கு சென்றதில் இருந்து அப்பகுதி மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக இவர் மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதில் முக்கியமாக அங்கு குழந்தைகளின் உணவில் மாட்டிறைச்சி தடை, மதுவிலக்கு நீக்கம், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை கலைத்தது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அந்த தீவுகளில் உள்ள 60000 மக்களும் அவர் மேல் அதிருப்தியில் உள்ளனர். இதையடுத்து இப்போது அந்த அதிகாரியை மத்திய அரசு திரும்பி பெறவேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் லட்சத்தீவுகளை சேர்ந்த நடிகை ஆயிஷா சுல்தானா கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ‘லட்சத்தீவுகளுக்கு மத்திய அரசு பயோ வெப்பனை அனுப்பியுள்ளது’ எனக் கூறியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இதையடுத்து பாஜக தலைவர் அப்துல் காதர் ஹாஜி காவல் நிலையத்தில் புகாரளிக்க ஆயிஷா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து விளக்கமளித்த ஆயிஷா ‘தான் அதிகாரியைதான் பயோ வெப்பன் எனக் கூறினேன். அரசாங்கத்தைப் பற்றி கூறவில்லை’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அற்புதம் அம்மாள் வீடியோவைப் பகிர்ந்த கார்த்திக் சுப்பராஜ்!