Publish Date: Tue, 03 Apr 2018 (09:58 IST)
Updated Date: Tue, 03 Apr 2018 (09:40 IST)
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் டிரெக்கிங் மற்றும் சுற்றுலா சென்ற 36 பே சிக்கி கொண்டனர். அதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உடல்கருகி பரிதாபமாக பலியாகிய நிலையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒவ்வொருவராக மரணம் அடைந்ததால் நேற்று வரை பலி எண்ணிக்கை 21ஆக இருந்தது
இந்த நிலையில் குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக இன்று உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த 26 வயது சிவசங்கரி என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இந்த விபத்தில் காயம் அடைந்த இன்னும் ஒருசிலர் சிகிச்சை பெற்று வந்தபோதிலும் அவர்கள் குணமடைந்து வருவதாகவும், மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன