பேருந்தை நிறுத்தாததால் குதித்த மாணவி பலி! – ஓட்டுனர், நடத்துனர் கைது!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (13:36 IST)
கிருஷ்ணகிரியில் ஓடும் பேருந்தில் இருந்து மாணவி குதித்து உயிரிழந்த விவகாரத்தில் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி உத்தனப்பள்ளி அருகே உள்ள சினிகிரிப்பள்ளியை சேர்ந்த முனிராஜ் மகள் நவ்யாஸ்ரீ. இவர் கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி சென்ற மாணவி வழக்கம்போல மாலை அரசு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

பேருந்து சினிக்கிரிப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் மாணவி ஓடும் பேருந்தில் இறங்க முயன்றுள்ளார். இதில் தவறி விழுந்து பேருந்தி சக்கரத்தில் அடிப்பட்டதால் மாணவி நவ்யாஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பேருந்து நிறுத்தத்தில் நில்லாமல் சென்றதே மாணவி இறப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை பேருந்தின் ஓட்டுனர், நடத்துனரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments