கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் விசாரணை!
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் நாளை சசிகலாவிடம் விசாரணை செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 
 
									
										
			        							
								
																	
	 
	கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை நடந்த வழக்கு தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	இந்த நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து ஏற்கனவே பல பிரமுகர்களிடம் விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கை விசாரணை செய்துவரும் தனிப்படை போலீசார் சென்னை வந்துள்ளனர்
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	நாளை அவர்கள் சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கொடநாடு வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சசிகலாவிடம் நடைபெறும் விசாரணையில் என்னவிதமான தகவல் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்