Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலனுன் சேர்ந்து வாழ கொலைகாரியாக மாறிய மாணவி

Advertiesment
காதலனுன் சேர்ந்து வாழ கொலைகாரியாக மாறிய மாணவி
, செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (20:59 IST)
காதலுடன் சேர்ந்து வாழ எண்ணி, பிளஸ்2 மாணவி ஒருவர் கொலைகாரியாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாரியப்பன் வீதியில் வசித்து வந்தவர் நாகலட்சுமி. இவரது கணவர் இறந்துவிட்டதால், இவர் தன் 3 மகள்களுக்குத் திருமணம் முடித்துவைத்து, தன் மகன் செந்திலுடன் வசித்து வந்தார்.

செந்தில் வேலை விஷயமாக வெளியில் சென்றதாகத் தெரிகிறது. அப்போது அவர் மகள் சாந்தா வீட்டிற்கு வந்தபோது, அவர் இறந்துகிடப்பது தெரியவந்தது, உடனே போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.

இதுகுறித்து போலிஸார் தீவிரவிசாரணை நடத்தினர். அதில், அருகில் வசிக்கும் பள்ளி மாணவி (17) அடிக்கடி  வீட்டிற்கு வந்து பாட்டியுடன் பேசியது தெரியவந்தது.

அவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது, அப்பெண் தான் பாட்டியை கொன்றதாக ஒப்புக்க்கொண்டார், அவர் அளித்த வாக்குமூலத்தில், தான் அப்பகுதியிலுள்ள ஒரு இளைஞனை காலிப்பதால், அவருடன் சேர்ந்து   ஆடம்பரமாக ச்வாழ விரும்பினேன். அதற்கு பாட்டியின் வீட்டில் நகைகள் இருந்ததால் அவரைக் கொன்று அவரிடமிருந்து நகைகளை திருடு எனது வீட்டில்  வைத்தேன். இப்போது போலீஸிடம் மாட்டிக்கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டு வெடிப்பு! 7 குழந்தைகள் பலி