Publish Date: Wed, 13 Jul 2022 (18:24 IST)
Updated Date: Wed, 13 Jul 2022 (18:25 IST)
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து 5 தொழிலதிபர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த வழக்கில் 5 தொழிலதிபர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர்களில் மதுரையை சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம் விசாரணை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கு குறித்து இரண்டு தொழிலதிபர்களிடம் விசாரணை செய்யப்பட்ட நிலையில் மேலும் மூன்று தொழிலதிபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது