Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி அருகே இளம்பெண், அவரது கணவர் கடத்தல்.. பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!

Mahendran
வெள்ளி, 24 ஜனவரி 2025 (10:12 IST)
எடப்பாடி அருகே இளம்பெண் மற்றும் அவரது கணவர் பட்டப்பகலில் ஒரு கும்பலால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரையும் வீடு புகுந்து அந்த பெண்ணின் உறவினர்கள் கடத்தியதாக தெரிகிறது.

பட்டப்பகலில் காரில் வலுக்கட்டாயமாக இளம்பெண்ணையும் அவரது கணவரையும் ஏற்றும் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரல் ஆனதை அடுத்து காவல்துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை அடுத்து அந்த பெண்ணின் பெற்றோர், சகோதரர், சகோதரி உட்பட ஆறு பேர் என ஒட்டுமொத்த குடும்பத்தையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை அவர்களது வீட்டுப் பெண் காதலித்ததாகவும், ஏழு மாதங்களுக்கு முன் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து அந்த பெண்ணையும் அவரது கணவரையும் மீட்ட போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து இளம்பெண் மற்றும் அவரது கணவரை ஒரு குடும்பமே சேர்ந்து கடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் பரிசை வந்து வாங்கிக்கோங்க.. போனில் அழைக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்..!

பிறப்பால் குடியுரிமை ரத்து என்ற டிரம்ப் உத்தரவு: தற்காலிக தடை விதித்தது நீதிமன்றம்!

டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. இணையதள முகவரி இதோ..!

பிரமாண்டமாக தயாராகிறது பனகல் பார்க் மெட்ரோ.. டிராபிக் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு?

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments