ஆழ் கடலில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, "கடல் பாதுகாப்பு மற்றும் கடல் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும்" என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இம்மாதிரி திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியுள்ளனர்.
பிரிட்டோ - தீபிகா என்ற காதல் ஜோடி, கடந்தாண்டு காதலர் தினத்தன்று காதலர்களாக மாறி, தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து பிரிட்டோ கூறியதாவது:
"வித்தியாசமாக காதலை புரபோஸ் செய்ய வேண்டும் என்பதற்காக ஆழ்கடலில் ப்ரொபோஸ் செய்தேன். கடல் வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நான் அவ்வாறு செய்தேன். என் காதலி தீபிகா ஒரு நீச்சல் வீராங்கனை என்பதால், அவருடைய விருப்பப்படி நாங்கள் ஆழ்கடலில் திருமணம் செய்து கொள்ள விரும்பினோம். வித்தியாசமாக திருமணம் நடத்த வேண்டும், அதே நேரத்தில் மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் ஆழ்கடலில் இந்த திருமணத்தை செய்தோம்," என்று தெரிவிக்கின்றனர்.
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. எத்தனையோ காதலர்கள் வித்தியாசமான முறையில் காதலை ப்ரொபோஸ் செய்வதும், திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்துவதும் பார்க்கப்பட்டு வருகிறது.
அந்தரத்தில் கூட காதலை ப்ரொபோஸ் செய்தவர்கள் உண்டு. ஆனால், ஆழ்கடலில் காதலை ப்ரொபோஸ் செய்து அதே ஆழ்கடலில் திருமணம் செய்த இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.