Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ரூபாய்க்கு சோறு மோசடி.. 100 கோடி பணம்! சதுரங்க வேட்டை காந்திபாபுவை மிஞ்சிய Scam! - அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்!

Prasanth Karthick
வெள்ளி, 24 ஜனவரி 2025 (10:11 IST)

சேலத்தில் ரூ.10க்கு உணவு தருவதாக பலரை ஈர்த்து அவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்ற கும்பலை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மக்களிடம் பணம் கொஞ்சம் தாராளமாக புழங்க தொடங்கினால் நூதனமான கொள்ளையடிக்கும் கும்பல் வித்தியாசமான முறைகளில் பணத்தை சுருட்டுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அப்படியான ஒரு சம்பவம்தான் சேலத்தில் நடந்துள்ளது.

 

சேலத்தில் மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் ரூ.10க்கு உணவு அளிப்பதாக ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். 10 ரூபாய்க்கு உணவு என்பதால் ஏராளமான மக்கள் அந்த மண்டபத்திற்கு படையெடுத்துள்ளனர். தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கும் பணம் முதலீடு செய்தால் 7 மாதங்கள் இரட்டிப்பாக கிடைக்கும் என விளம்பரம் செய்துள்ளனர்.

 

அதை நம்பிய பலரும் ஆயிரங்கள் முதல் லட்சங்களில் பணத்தை அள்ளிக் கொடுத்து முதலீடு செய்துள்ளனர். இதனால் நேற்றும் அந்த கும்பல் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 2 நாட்களில் 2 லட்சமாக திரும்ப கிடைக்கும் என விளம்பரம் செய்துள்ளது. இதை கேட்ட மக்கள் பலர் வெளியே கடனுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு முதலீடு செய்ய வந்துள்ளனர்.

 

இந்த விவகாரம் குறித்து அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அது புரியாத மக்கள் சிலர் போலீஸார் தாங்கள் லாபம் பெறுவதை தடுத்துவிடுவார்களோ என அவர்களை எதிர்த்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு மக்கள் கட்டுப்படுத்தப்பட்டனர்.

 

அதை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் உள்ளே சென்று சோதனை நடத்தியதில் சரியான ரசீது கூட கொடுக்காமல் ரூ.100 கோடி வரை வசூலித்து வைத்திருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

இதுதொடர்பாக அந்த அறக்கட்டளை உரிமையாளர் விஜயாபானுவை விசாரித்தபோது அவர் மீது ஏற்கனவே பல மோசடிகள் சம்பவங்களை செய்துள்ளவர் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீஸார், தங்க நகைகள், ரொக்கம் என பல கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் பரிசை வந்து வாங்கிக்கோங்க.. போனில் அழைக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்..!

பிறப்பால் குடியுரிமை ரத்து என்ற டிரம்ப் உத்தரவு: தற்காலிக தடை விதித்தது நீதிமன்றம்!

டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. இணையதள முகவரி இதோ..!

பிரமாண்டமாக தயாராகிறது பனகல் பார்க் மெட்ரோ.. டிராபிக் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு?

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments