ராகுல் காந்தி அரசியலில் இருந்து விலக இது இன்னொரு சந்தர்ப்பம்!" - குஷ்பு விமர்சனம்

Siva
வெள்ளி, 14 நவம்பர் 2025 (13:54 IST)

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்த நிலையில், தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

 
தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையை உறுதிசெய்துள்ள நிலையில் இந்தியா கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்ஹ்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து  குஷ்பு தனது பதிவில், "வெற்றி பெற என்ன தேவை என்பதை அவர்கள் காட்டிவிட்டார்கள். காங்கிரஸ் படுதோல்வி அடைந்துவிட்டது. ராகுல் காந்தி அரசியலை விட்டு விலக இது மற்றுமொரு வாய்ப்பும் காரணமும் ஆகும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
 
மேலும், "தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது. சில தலைவர்கள் வெற்றி பெறுவதற்காகவே பிறந்துள்ளனர். மக்களுக்கு அவர்கள் ஆற்றிய சேவை அவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளது" என்றும் அவர் புகழ்ந்துள்ளார். 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிதாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

பாமக தலைவராக அன்புமணி தொடர முடியாது.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

அடுத்த கட்டுரையில்
Show comments