Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் ரஜினிக்கு குஷ்பு ஆதரவு .... உட்கட்சிக்குள் குழப்பம் !

Advertiesment
ரஜினி
, புதன், 22 ஜனவரி 2020 (13:57 IST)
திராவிட கட்சிகள் உருவாகக்  காரணமாக இருந்தவர் தந்தை பெரியார். சமீபத்தில் துக்ளக் இதழின் ஐம்பதாம் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி காந்த், தந்தை பெரியாரை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு திராவிடர் கழகம் திராவிட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.   ரஜினி மன்னிப்புக் கேட்க  வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் நேற்று பேட்டி கொடுத்த ரஜினிகாந்த், ஈவேரா குறித்து தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என தெரிவித்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஜினிக்கு ஆதரவாக குஷ்பு ஒரு டுவீட் பதிவிட்டுள்ளதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
 
மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவில் நடிக்க வேண்ய்டியுள்ளதால் அவருகு ஆதரவாக பேசுகிறீர்களா என நெட்டிசன்கள் பலரும் அவருக்கு கேள்வி எழுப்பி இருந்தனர்.
 
அதுமட்டுமின்றி , கட்சியே ஆரம்பிக்காமலும் அரசியலுக்கு வராமல் உள்ள  ரஜினிக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான குஷ்பு கூறியுள்ள  கருத்துக்கு, திமுகவின் கூட்டணியில் உள்ள  காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”நமக்கு தேவை சிலை அல்ல; வேலை தான்..” பாஜகவை வெளுத்து வாங்கும் பிரகாஷ் ராஜ்