Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினியை பாத்து பயப்பட நாங்க திமுக இல்ல! – அமைச்சர் ஜெயக்குமார் நறுக் பதில்!

Advertiesment
ரஜினியை பாத்து பயப்பட நாங்க திமுக இல்ல! – அமைச்சர் ஜெயக்குமார் நறுக் பதில்!
, புதன், 22 ஜனவரி 2020 (11:18 IST)
பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவதூறாக பேசியது குறித்த சம்பவத்துக்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

துக்ளக் 50வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதை தொடர்ந்து அவர்மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் யாரிடமும் மன்னிப்பு கேட்க போவதில்லை எனவும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ”அதிமுக தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா நான்கு பேருக்கும் சிறு கலங்கம் விளைவிக்கும் வகையில் யார் பேசினாலும் அதிமுக அரசு அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. 1971ல் நடக்காத ஒரு சம்பவத்தை பற்றி ரஜினி பேசி வருகிறார். துக்ளக் ஆசிரியர் சோ அன்றே நீதிமன்றத்தில் தான் செவிவழி செய்தியாக கேட்டதை எழுதியதாக ஒப்புக்கொண்டுள்ளார்” என கூறியுள்ளார்.

ரஜினியை கண்டு திராவிட கட்சிகள் பயப்படுவதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் ”ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம். அதிமுகவுக்கு அந்த அவசியல் இல்லை” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவை கழட்டிவிடதான் வெயிட்டிங்! அதிமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு!