சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் விழாவில் கலந்து கொண்ட போது 1971ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் நடத்திய பேரணியில் இந்து கடவுள்கள் அவமரியாதை செய்யப்பட்டதாகவும், அந்த செய்தியை துக்ளக்கில் சோ அவர்கள் தைரியமாக வெளியிட்டதால் கடும் எதிர்ப்புகளை சந்தித்ததாகவும் தெரிவித்திருந்தார்
இந்த தகவலை பெரியாரின் ஆதரவாளர்கள் மறுத்து வந்தனர். இந்து கடவுள்களை பெரியார் அவமரியாதை செய்யவில்லை என்றும் ரஜினிகாந்த் தவறான தகவல்களை கூறினார் என்றும் கூறினார்
இந்த நிலையில் நேற்று பேட்டியளித்த ரஜினிகாந்த் அவர்கள் அவுட்லுக் என்ற பத்திரிகையின் ஆதாரங்களை காண்பித்து தான் கூறியது சரிதான் என்றும் கூறினார். அதற்கு பெரியாரின் ஆதரவாளர்கள் துக்ளக் பத்திரிகையை அவர் ஆதாரமாக காட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்
இந்த நிலையில் தற்போது 1971 ஆம் ஆண்டு வெளிவந்த துக்ளக் பத்திரிகை ஊடகம் ஒன்றில் வெளிவந்துள்ளது. இந்த பத்திரிகையில் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையில் ராமர் சிலைக்கு அவமரியாதை செய்யப்பட்டதாக குறிப்பிட்டதோடு ஒரு புகைப்படமும் அந்த கட்டுரையில் உள்ளது
மேலும் இது போன்ற ஊர்வலத்தை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நடத்த அனுமதிக்க மாட்டார்கள் என்றும் ஆனால் திமுக ஆட்சி இந்த ஊர்வலத்தை அனுமதித்துள்ளது என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது
எனவே துக்ளக் பத்திரிகையில் இந்த செய்தி வெளிவந்துள்ளது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரியாரின் ஆதரவாளர்கள் இந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்