Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்வி நிறுவனங்கள் மதத்தை காட்டுவதற்கு அல்ல..! – குஷ்பு ட்வீட்!

Advertiesment
கல்வி நிறுவனங்கள் மதத்தை காட்டுவதற்கு அல்ல..! – குஷ்பு ட்வீட்!
, புதன், 9 பிப்ரவரி 2022 (11:49 IST)
கர்நாடகாவில் ஹிஜாப் அணிவது தொடர்பான சர்ச்சை வெடித்துள்ள நிலையில் அதுகுறித்து குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு பெண்கள் ஹிஜாப் அணிந்து செல்வதற்கான தடை மற்றும் அதை தொடர்ந்த போராட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அதை தொடர்ந்து ஹிஜாப் தடையை நீக்குவதை எதிர்த்து இந்து மாணவ அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியதால் இரு பிரிவினர் இடையே மோதல் எழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஹிஜாப் சர்ச்சை விவகாரம் குறித்து பலரும் பல கருத்துகளை கூறி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பேசிய பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூ “கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல, சமத்துவம் சார்ந்தது. பள்ளியில் சீருடை அணிவதையே நான் நம்புகிறேன். விதிகள் அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல, ஒரு இந்தியராக உங்கள் பலத்தைக் காட்டுவதற்காகவே. இந்த விஷயத்தில் அரசியலில் ஈடுபடுவது அவமானம்” என்று தெரிவித்துள்ளார்

மேலும் “நம் பள்ளி நாட்களில் எப்படி இருந்தோமோ, அதே போல் ஒன்றாக இருப்போம். என் பள்ளி நாட்களில் சீருடையைத் தவிர வேறு எதையும் அணிந்த குழந்தைகளை பார்த்ததில்லை. என் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போது கூட அப்படி இல்லை. உங்கள் மதத்தை உங்கள் பேட்ஜாக பள்ளிக்கு அணிய வேண்டும் என்ற இந்த திடீர் தூண்டுதல் ஏன்? பள்ளிகளுக்கு விதிகள் இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் அறிவிப்பு!