கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து செல்ல தடை மற்றும் அதை தொடர்ந்த மாணவர்கள் போராட்டம் குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு பெண்கள் ஹிஜாப் அணிந்து செல்வதற்கான தடை மற்றும் அதை தொடர்ந்த போராட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அதை தொடர்ந்து ஹிஜாப் தடையை நீக்குவதை எதிர்த்து இந்து மாணவ அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியதால் இரு பிரிவினர் இடையே மோதல் எழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது” என தெரிவித்துள்ளார்.