அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன், போனில் "சார்" என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த சம்பவத்தில் ஒரு முக்கிய பிரபலத்தின் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான ஞானசேகரன், மாணவியை மேலும் ஒருவருடன் பாலியலில் ஈடுபடுத்த திட்டமிட்டதாகவும், போனில் பேசிய அந்த நபரை "நான் அவளை மிரட்டி விட்டு விடுவேன்" என்று கூறியதோடு, "சாருடன் நீ ஒன்றாக இருக்க வேண்டும்" என்று மாணவியிடம் கூறியதாகவும் தெரிகிறது.
இதன் மூலம் ஞானசேகரனுக்கு தெரிந்த பிரபலம் ஒருவருக்கும் இந்த குற்றத்தில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஞானசேகரன் போனில் குறிப்பிட்ட "சார்" என்ற நபர் யார், முக்கிய பொறுப்பில் இருக்கிறாரா என்பதை பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதன் மூலம் மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் இன்னொரு நபருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதை அடுத்து அந்த நபரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.