Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சொத்துப்பட்டியல் - 58.44 கோடியா ?

Advertiesment
வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சொத்துப்பட்டியல் -  58.44 கோடியா ?
, வியாழன், 18 ஜூலை 2019 (11:45 IST)
வேலூர் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் கதிர் ஆனந்தின் சொத்து மதிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

வேலூர் தொகுதிக்கு மட்டும் ரத்து செய்யப்பட்ட மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மீண்டும் நடக்க இருக்கிறது. இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்தும் அதிமுக சார்பில் ஏ சி சண்முகமும் மீண்டும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார் தீபலஷ்மி.

நேற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுவில் அவரது சொத்துமதிப்புப் பற்றிக் கூறியுள்ளார். அதில் தனக்கும் தனது மனைவி சங்கீதாவுக்கும் ரூ.58,43 ,82 ,767 மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ள ஆவணங்களில் வங்கிகளில் கையிருப்புத் தொகையாக ரூ19,03,16,000-ம், தனது மனைவியின் வங்கிக்கணக்கில் 8,083,879 ரூபாயும் உள்ளாதத் தெரிவித்துள்ளார். அதேப்போல 3.664 கிலோ தங்கமும்  3 காரட் வைரமும், 31.702 கிலோ வெள்ளியும் உள்ளதாகவும், தன் மனைவி சங்கீதா கையிருப்பில் 1,003 கிராம் தங்கம், 1.5 காரட் வைரம், 10.868 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தம்பியை வைத்துக் கணவனைக் கொலை செய்த மனைவி – பின்னணி என்ன ?